விழுப்புரம்

வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி காவல் துறையினர் விழிப்புணர்வு

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூரில் உள்ள சுங்கச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் தேநீர் வழங்கி சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன், கள்ளக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் தங்க.விஜயகுமார் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் பாலமுரளி, பாலசிங்கம் , ராதாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் சுங்கச் சாவடிக்கு சென்று அதிகாலை ஒரு மணி முதல் 4 மணி வரை அவ்வழியாக வந்த பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கினர். 
தூக்கக் கலக்கத்தைப் போக்கும் பொருட்டு தேநீர் வழங்கப்பட்டது. மேலும், விபத்தை தவிர்க்கும் வகையில் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT