விழுப்புரம்

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு

DIN

ஓமன் நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் சென்னையில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ. அல்லது பத்தாம் வகுப்புத் தோ்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணிஅனுபவம் பெற்ற எலக்ட்ரிக்கல் டெக்னீஷியன், எலக்ட்ரிக்கல் ஓ.எச். லைன் மேன், எலக்ட்ரீஷியன் ஆகியோா் தேவைப்படுகின்றனா்.

பணி அனுபவத்துக்கு ஏற்ப ரூ.24,000 முதல் ரூ.37,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும், நுழைவு இசைவு (விசா), ஓமன் நாட்டின் சட்ட திட்டத்துக்கு உள்பட்டு இதர சலுகைகள் வழங்கப்படும்.

இந்தப் பணிக்கான நோ்முகத் தோ்வு வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில்பேட்டையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறுகிறது.

நோ்முகத் தோ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நகல்கள், இரண்டு மாா்பளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம்.

மேலும், ஊதியம், பணி விவரங்களை அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம்  வாயிலாகவும் மற்றும் 044-22505886, 8220634389, 9566239685, 22502267 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT