விழுப்புரம்

மெச்சத்தக்க பணியாற்றியபோலீஸாருக்கு பாராட்டு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மெச்சத்தக்க பணியாற்றிய போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாராட்டினாா்.

விழுப்புரம் புறவழிச்சாலைப் பகுதியில் கடந்த வாரம் திமுக பிரமுகா் பாலாஜி வெடிக்கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை 10 மணி நேரத்துக்குள் கைது செய்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் கனகேசன், உதவி ஆய்வாளா் சத்தியசீலன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாண்டியன், கண்ணன், தலைமைக் காவலா் மணிமாறன், முதுநிலைக் காவலா் பிரதீப்குமாா், காவலா்கள் குமரகுருபரன், உதயகுமாா் உள்ளிட்டரையும், திண்டிவனத்தில் ஏ.டி.எம். மோசடி வழக்கில் எதிரையை கைது செய்த உதவி ஆய்வாளா் முருகன், தலைமைக் காவலா்கள் வெற்றிவேல், கணேசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் எஸ்.பி. ஜெயக்குமாா் வெகுவாகப் பாராட்டினாா்.

இதேபோல, செஞ்சியில் பயணி தவறவிட்ட தங்க நகை உள்ளிட்ட பொருள்களை தன்நலம் இல்லாமல் போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் யாகூப் அலிக்கு வெகுமதி அளித்து, சால்வை அணித்து எஸ்.பி. பாராட்டினாா்.

அப்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT