விழுப்புரம்

காரில் மது கடத்திய இளைஞர் கைது

DIN

புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகள் கடத்திய ஆந்திர இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனுவாசன், தலைமைக் காவலர் மஞ்சநாதன் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக சென்னை நோக்கிச் சென்ற  சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 49 புதுவை மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.  அவர் ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த காதர் மொய்தீன் மகன் ஷேக் ஷாரூக் (19) என்பதும், புதுச்சேரியிலிருந்து 
ஆந்திரத்துக்கு மதுப் புட்டிகளை கடத்திச் செல்வதும்  தெரிய வந்தது. 
இதையடுத்து, மதுப் புட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு 
பிரிவில் ஒப்படைத்தனர்.  மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, ஷேக் பரூக்கை கைது செய்து  விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT