விழுப்புரம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு பேரவைக் கூட்டம்

DIN


விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு)  ஆண்டு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க துணைத் தலைவர் கே.ஏழுமலை கொடியேற்றி வைத்தார். திட்டத் தலைவர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.சிவசங்கரன் வரவேற்றார். 
 இணைச் செயலர் எஸ்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மண்டலச் செயலர் டி.பழனிவேல் தொடக்க உரையாற்றினார்.  
திட்டச் செயலர் கே.அம்பிகாபதி வேலை அறிக்கை தாக்கல் செய்தார். சிஐடியு மாவட்டச் செயலர் எஸ்.முத்துக்குமரன்,  மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் என்.சுப்பிரமணியன்,  மாநிலச் செயலர் கே.காங்கேயன்,  ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் திட்டச் செயலர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  மின்வாரியம் பொதுத் துறையாக தொடர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.  பகுதிநேர தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.  தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாதம் 20 நாள் வேலை வழங்க வேண்டும். கஜா புயல் பணிகளை மேற்கொண்ட மின் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
மாநில பொதுச் செயலர் எஸ்.ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார். மின் ஊழியர்கள் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் அருள் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT