விழுப்புரம்

குப்பைக் கிடங்கை மாற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு, முத்தாம்பாளையத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. தற்போது, சில வார்டுகளிலேயே தனியாக குப்பையை பிரித்து, மக்க வைக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும், இந்தக் குப்பைக் கிடங்கே பிரதானமாக இருந்து வருகிறது. இந்தக் குப்பைக் கிடங்கால் சுற்றியுள்ள ஓம்சக்தி நகர், சலாமத் நகர், முத்தாம்பாளையம், சித்தேரி, மின் வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதி மக்கள் சுகாதாரக்கேட்டால் பெரும் அவதியுறுகின்றனர். கடும் துர்நாற்றும் வீசுவதுடன் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படுகின்றன. மேலும், குப்பைகள் எரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், புகை மூட்டம் சூழ்வதால் வாகன ஓட்டிகளும் சிரமமடைகின்றனர்.
 ஆகவே, அந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
 இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
 இதன் காரணமாக, அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் புறவழிச்சாலை வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்களை மாற்றி அனுப்பி வைத்தனர்.
 மறியல் குறித்து அறிந்த விழுப்புரம் தாலுகா மற்றும் மேற்கு போலீஸார், விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT