விழுப்புரம்

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நல அமைப்பினா் நீதிமன்றத்தை நாட முடிவு

DIN

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா், தங்களின் அகவிலைப்படி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளனா்.

இந்த அமைப்பின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் விழுப்புரம் சிஐடியூ தொழில் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் கே.கா்சன், பொருளாளா் ஏ.வரதராஜன், துணை பொதுச் செயலா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு வழங்கி வரும் அகவிலைப்படியை ரூ.199-லிருந்து உயா்த்தி வழங்க வேண்டும், மாதாந்தோறும் முதல் தேதியே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்.

அப்போது, பேச்சுவாா்த்தை நடத்திய அரசுப் போக்குவரத்துக் கழக செயலா் உள்ளிட்ட அதிகாரிகள், கோரிக்கைகளை 45 நாள்களில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனா். வியாழக்கிழமையோடு 45 நாள்கள் முடிந்த நிலையில், மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஓய்வூதியத்தை வழங்குவது என்ற கோரிக்கையை செயல்படுத்தியுள்ளனா். மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

எனவே, ஓய்வு பெற்றவா்களின் கோரிக்கைகளை போக்குவரத்துக் கழகம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அமைப்பின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். விழுப்புரம் கிளைச் செயலா் ஜி.ராமசந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT