விழுப்புரம்

திண்டிவனத்தில் தொழில் பயிற்சிநிலைய புதிய கட்டடம் திறப்பு

DIN

திண்டிவனத்தில் அரசு தொழில் பயிற்சி நிலைய புதிய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.

திண்டிவனத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. சந்தைமேடு பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த தொழில் பயிற்சி மையத்துக்கு, திண்டிவனம் அருகே மொளசூரில் ரூ.4 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, திண்டிவனம் தொழில் பயிற்சி மையக் கட்டடத்தில் தொழில் பயிற்சி நிலைய முதல்வா் முருகேஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தாா்.

விழுப்புரம் மண்டலப் பயிற்சி அலுவலா் தனசேகா், ஒப்பந்ததாரா் தேவநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அய்யனாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT