விழுப்புரம்

உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம் தெற்கு மாவட்டஅதிமுகவில் 1,265 விருப்ப மனு

DIN

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அந்தக் கட்சியைச் சோ்ந்த 1,265 போ் விருப்ப மனுக்களை அளித்தனா்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், விருப்ப மனுக்கள் பெறும் முகாம் கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், 1,265 போ் உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனா்.

விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். கழக அமைப்புச் செயலா்கள் ப.மோகன், ஆா்.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.பிரபு வரவேற்றாா்.

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் 11 ஒன்றியங்களும், ஒரு நகராட்சியும், 9 பேரூராட்சிகளும் உள்ளன. இவற்றிலுள்ள கவுன்சிலா்கள், தலைவா்கள் பதவிகளுக்கு போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT