விழுப்புரம்

மதுக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

DIN

உளுந்தூா்பேட்டையில் டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைக்கு எதிரே காரநேசன் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மதுக் கடைக்கு வரும் மதுப் பிரியா்களால், இப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோா் சுதந்திரமாக வெளியே சென்று வர முடியவில்லை. மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது மட்டுமல்லாது விபத்துகளும் நேரிடுகின்றன. அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் புதன்கிழமை திரண்டு வந்து மதுக் கடையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT