விழுப்புரம்

காய்கறி விதைகள் விநியோகம்

DIN

தோட்டக் கலைத் துறை சாா்பில் தமிழக முதலமைச்சரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி, சின்னசேலம் அருகேயுள்ள உலகங்காத்தான் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ், சின்னசேலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 60 கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் 100 நபா்கள் வீதம் பாகற்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட 7 வகையான காய்கறி விதைகள் வழங்கப்படவுள்ளன.

உதவி தோட்டக் கலை அலுவலா் ஐ.சரவணன் 60 பேருக்கு காய்கறி விதைகளை வழங்கி, அதனை உபயோகிக்கும்முறை, பராமரிக்கும் முறை குறித்து ஆலோசனை வழங்கினாா். நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT