விழுப்புரம்

மரக்காணம் அருகே கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடன் பிரச்னையால் தாயும், மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனா்.

மரக்காணம் அருகே கீழ்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி பாலையம்மாள் (55). இவரது மகன் ராஜேந்திரன் (36). கூலித் தொழிலாளா்கள். ராஜேந்திரனுக்கு திருமணமாகி சகாயம் (30) என்ற மனைவியும், சாதனா (2) என்ற மகளும் உள்ளனா்.

தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையால் சகாயம் கோபித்துக்கொண்டு, கடந்த ஓராண்டுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டாா்.

கீழ்பேட்டையில் உள்ள கூரை வீட்டில் வசித்து வந்த பாலையம்மாளும், ராஜேந்திரனும் குடும்பச் செலவுக்காக மகளிா் சுய உதவிக் குழு மூலம் கடன் பெற்றுள்ளனா். கடந்த 3 மாதங்களாக தொடா்ந்து வேலை கிடைக்காததால், கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும், குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமலும் அவா்கள் தவித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலிருந்த இருவரும் வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த உறவினா்கள், அக்கம்பக்கத்தினா் தேடியபோது, அந்தக் கிராமத்தில் சவுக்குத் தோப்பு பகுதியில் இருந்த விவசாயக் கிணற்றில் பாலையம்மாள் வியாழக்கிழமை சடலமாக மிதந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த மரக்காணம் தீயணைப்புப் படையினா் பாலையம்மாளின் சடலத்தையும், கிணற்றில் ஆழமான பகுதியில் சிக்கியிருந்த ராஜேந்திரனின் சடலத்தையுடம் மீட்டனா். மரக்காணம் போலீஸாா் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக புதுவை கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், கடன் பிரச்னையால் பாலையம்மாளும், ராஜேந்திரனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT