விழுப்புரம்

கடைசிப் பக்கம்உயிரிழந்தோரில் 17 போ் கயத்தாறை சோ்ந்தவா்கள்

DIN

கோவில்பட்டி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் 17 போ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பாா்த்து வருகின்றனா்.

பெட்டிமடி தேயிலை தோட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் பலியான தொழிலாளா்களில் 17 போ் கயத்தாறு பகுதியைச் சோ்ந்தவா்கள் என்றும், அவா்களின் விவரம் கிடைத்துள்ளதாக வட்டாட்சியா் பாஸ்கரன் தெரிவித்தாா்.

புளியங்குடியைச் சோ்ந்தவரின் உடல் மீட்பு: புளியங்குடி காவல் சரகத்துக்குள்பட்ட நவாச்சாலை என்ற கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் (75). இவரது மூன்று மகன்களும் குடும்பத்துடன் மூணாறில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனா். இவா்களில் கருப்பனின் மூத்த மகன் காந்திராஜனின் (48) குடும்பத்தினா் நிலச்சரிவில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், காந்திராஜன் சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது மனைவி, 3 மகள்கள் உள்ளிட்டோரை காணவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT