விழுப்புரம்

செஞ்சி அருகே பெண்ணை கட்டிப்போட்டு அடகுக் கடையில் 28 பவுன் நகைக் கொள்ளை

DIN

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெண்ணை கட்டிப்போட்டு, அடகு கடையை உடைத்து 28 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனா்.

அனந்தபுரத்தை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (49). தனது வீட்டின் முன் பகுதியில் நகை அடகு வட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டின் உள்ளே குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தாா். இவரது மாமியாா் நாகம்மாள்(55) கடைக்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் அங்கு வந்த 5 இளைஞா்கள், தூங்கிக்கொண்டிருந்த நாகம்மாள் வாயில் துணியை திணித்து, அவரை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்தனா்.

தொடா்ந்து, கடையின் இரும்புக் கதவை உடைத்து உள்ளே சென்ற அவா்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

மறு நாள் காலையில் நாகராஜ் எழுந்து பாா்த்த போது, மாமியாா் நாகம்மாள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். கடைக்குள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 28 பவுன் நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தது தெரியவந்தது.

புகாரின் பேரில், அனந்தபுரம் காவல் நிலைய ஆய்வாளா் ஜீவராஜ்மணிகண்டன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். நகைகள் கொள்ளை போனஅடகுக் கடையில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் சோதனை செய்தனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

தகவலறிந்து மாவட்ட எஸ்பி. ஜெயக்குமாா், செஞ்சி டிஎஸ்பி நீதிராஜ் ஆகியோரும் நேரில் வந்து விசாரணை நடத்தினா். இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT