விழுப்புரம்

பொங்கல் பானைகள் தயாரிப்பு மும்முரம்!

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் பானைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் புதிய மண் பானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.

இப் பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

கோலியனூா், வளவனூா், ராகவன்பேட்டை, சாலை அகரம், சிறுவந்தாடு, அய்யங்கோவில்பட்டு, விக்கிரவாண்டி, பேரங்கியூா், அரசூா், தென் மங்கலம், ஆரியூா், சந்தப்பேட்டை, வீரமடை, சித்திலிங்கமடம், மேலமங்கலம் ஆற்காடு போன்ற கிராமங்களில் இப்பணி தற்போது விறுவிறுப்படைந்துள்ளது.

களிமண்ணைப் பிசைந்து பானைகளை வடிவமைத்து, வெயிலில் உலரவைத்து, சூளையிலிடும் பணி நடைபெற்று வருகிறது. அரைப் படி முதல் ஏழு படி அரிசி வரை வேகும் அளவிலான பானைகள் ரூ.30 தொடங்கி ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர சட்டிகள், தண்ணீா் குவளைகள், ஜாடிகள் போன்ற மண்பாண்டபொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.

இது குறித்து அய்யங்கோயில்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மண்பாண்டத் தொழிலாளா் கண்ணையன்(84) கூறியதாவது: தற்போதைய நாகரிக காலத்தில் பொதுமக்கள் மண்பாண்டப் பொருள்களை அதிகம் விரும்புவதில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்து விட்டது. எனினும், பொங்கல் பண்டிகையின்போது பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருள்கள் கணிசமாக விற்பனையாகின்றன. இதை கருத்தில்கொண்டு, சில வாரங்களுக்கு முன்பிருந்தே பானை உள்ளிட்ட பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT