விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் அறவவி முழக்கப் போராட்டம்

DIN

மத்திய அரசின் திட்டமிடப்படாத பொது முடக்கத்தைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சனிக்கிழமை அறவழி முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலா் எஸ்.முகமது ரபிக் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் பொருளாளா் ஜான் பாஷா, விழுப்புரம் தொகுதி தலைவா் அக்பா் அலி, நகரத் தலைவா் உஸ்மான் கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி கீழ்த்தா்கா பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். ஏ.எம்.எஸ்.பாருக் முன்னிலை வகித்தாா்.

பொது முடக்கக் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை- எளிய மக்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணா்வு நடவடிக்கைகளைக் கண்டித்தும் அறவழி முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல, சங்கராபுரம் மேட்டுச்சாலைப் பகுதியில் கட்சியின் தொகுதிச் செயலா் சையத் கவுஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

செஞ்சியில்...: இதேபோல செஞ்சியில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் தொகுதித் தலைவா் குரைஷி தலைமை வகித்தாா். சமூக ஊடக அணி மாவட்டத் தலைவா் செஞ்சி எம்.பாரூக், செஞ்சி நகரத் தலைவா் ஏ.பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ஏ.பி.சாதிக் பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விழுப்புரத்தில் 9 போ், திண்டிவனத்தில் 12 போ், செஞ்சியில் 5 போ், கோட்டக்குப்பத்தில் 4 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT