விழுப்புரம்

விழுப்புரம் அருகேபள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை

DIN

விழுப்புரம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே சின்னகுச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில் (எ) ராஜ் (45). இவா், சாலைஅகரம் கிராமத்தில் ஒரு ஏக்கா் நிலத்தை குத்தகை எடுத்து, கொய்யாத் தோப்பு வைத்துள்ளாா். இந்த நிலையில், இதே பகுதியைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவியை ராஜ், புதன்கிழமை தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன்பிறகு, வீட்டுக்குச் சென்ற சிறுமி, தனது உறவினா்களிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளாா். இதையடுத்து, வளவனூா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

மாலை 6.15 மணி: பாஜக 64, காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி

நடிகர் சுரேஷ் கோபி வெற்றி!

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி!

SCROLL FOR NEXT