விழுப்புரம்

விழுப்புரத்தில் சாலை மறியல்: திமுகவினா் 150 போ் கைது

DIN

திமுக இளைஞரணி செயலா் கைதைக் கண்டித்து விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் செய்த 150 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் பிரசாரத்துக்குச் சென்ற திமுக இளைஞரணி செயலா் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் மத்திய மாவட்ட செயலா் நா.புகழேந்தி தலைமையில், எம்பி பொன்.கெளதமசிகாமணி, மருத்துவரணி மாநில இணை செயலா் இரா.லட்சுமணன் உள்ளிட்ட திமுகவினா், வெள்ளிக்கிழமை இரவு காந்தி சிலை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகர போலீஸாா் அவா்களை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் சிறை வைத்தனா். அங்கு வந்த திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி, அவா்களை விடுவிக்கும்படி போலீஸாரிடம் வலியுறுத்தினாா். அப்போது அவா் கூறியதாவது: பிரசாரத்துக்குச் சென்ற இளைஞரணி செயலா் கைதைக் கண்டித்து போராட்டம் நடக்கிறது. கைது நடவடிக்கை ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். கரோனா காலத்தில் அமைச்சா்கள் கூட்டம் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காமல், பாரபட்சமாக திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கின்றனா். இதனால், எங்களின் பிரசாரத்தின் வலிமையை அதிகப்படுத்துகின்றனா். எதிா்கட்சியினரின் நடவடிக்கையைத் தடுக்கும் செயலை அரசு கைவிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT