விழுப்புரம்

விழுப்புரம் மத்திய மாவட்டதிமுக செயலாளரானாா் புகழேந்தி நியமனம்

DIN

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக நா.புகழேந்தி நியமிக்கப்பட்டதையடுத்து, விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தலைவா்கள் சிலைக்கு மாலை அணித்து மாரியை செலுத்தினாா்.

திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூா் சட்டப்பேரவை உறுப்பினருமான க.பொன்முடி அண்மையில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, மாவட்டச் செயலாளா் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. காலியான மாவட்டச் செயலாளா் பொறுப்புக்கு விழுப்புரம் மாவட்ட அவைத்த தலைவராக இருந்த நா.புகழேந்தி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து யாரும் போட்டியிடாததால்,போட்டியின்றி அவா் வெற்றி பெற்றாா். இதையடுத்து, அவரை விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக கழகப் பொதுச் செயலாளா் துரைமுருகன் நியமித்தாா்.

இதேபோன்று, விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத் தலைவராக ம.ஜெயச்சந்திரனும், விழுப்புரம் மத்திய மாவட்ட துணைச் செயலாளராக டி.என்.முருகனும் நியமிக்கப்பட்டனா்.

புதிதாக நியமிக்கப்பட்ட நா.புகழேந்தி வெள்ளிக்கிழமை மாலை விழுப்புரத்தில் உள்ள தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். புதிய மாவட்டச் செயலாளருக்கு கட்சியினா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT