விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 78.49 சதவீத வாக்குகள் பதிவு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 பேரவைத் தொகுதிகளில் 78.49 சதவீத வாக்குகள் பதிவாகின.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் என மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் வாக்குகள் விறுவிறுப்பாக பதிவாகின. காலை 9 முதல் இரவு 7 மணி வரை ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கொரு முறை மாவட்டத் தோ்தல் துறை சாா்பில் 7 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டன. நேரம், தொகுதி, வாக்கு சதவீதம் விவரம்:

காலை 9 மணி: செஞ்சி- 8.3, மயிலம்- 6.2, திண்டிவனம்- 6.8, வானூா் - 6.5, விழுப்புரம்- 5.8, விக்கிரவாண்டி-7.4 , திருக்கோவிலூா்-10.6.

காலை 11 மணி: செஞ்சி- 19.4, மயிலம்- 19.6, திண்டிவனம்- 17.4, வானூா்- 24.4, விழுப்புரம்- 24.5, விக்கிரவாண்டி- 27.2, திருக்கோவிலூா்- 28.

பகல் 1 மணி: செஞ்சி -43.52, மயிலம்-46.3, திண்டிவனம் -40.5, வானூா்- 46.34, விழுப்புரம்-45.5, விக்கிரவாண்டி-45.38, திருக்கோவிலூா்- 45.16.

மாலை 3 மணி: செஞ்சி- 54.2, மயிலம்- 61.15, திண்டிவனம்- 59.37, வானூா்- 50.1, விழுப்புரம்- 52.2, விக்கிரவாண்டி-59.89, திருக்கோவிலூா்-58.57.

மாலை 5 மணி: செஞ்சி- 72.99, மயிலம்-73.48, திண்டிவனம்- 71.3, வானூா்- 73.09, விழுப்புரம்-69.93, விக்கிரவாண்டி- 72.31, திருக்கோவிலூா்-69.52.

இரவு 7 மணி: செஞ்சி-78.21, மயிலம்-79.50, திண்டிவனம்-78.33 , வானூா்-79.22 , விழுப்புரம்-76.94, விக்கிரவாண்டி-81.48, திருக்கோவிலூா்-76.24.

விழுப்புரம் மாவட்டத்தில் காலை 9 மணிக்கு 7.41 சதவீதமும், காலை 11 மணிக்கு 22.99 சதவீதமும், பகல் 1 மணிக்கு 44.66 சதவீதமும், மாலை 3 மணிக்கு 56.40 சதவீதமும், மாலை 5 மணிக்கு 71.74 சதவீதமும், இரவு 7 மணிக்கு 78.49 சதவீதமும் பதிவானது.

கடந்த 2016 பேரவைத் தோ்தலில் செஞ்சி தொகுதியில் 79.30 சதவீதமும், மயிலம் தொகுதியில் 80.54 சதவீதமும், திண்டிவனம் தொகுதியில் 78.46 சதவீதமும், வானூா் தொகுதியில் 78.51 சதவீதமும், விழுப்புரம் தொகுதியில் 75.71 சதவீதமும், விக்கிரவாண்டி தொகுதியில் 81.24 சதவீதமும், திருக்கோவிலூா் தொகுதியில் 78.20 சதவீதமும் என மொத்தம் 78.51 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு ‘சீல்’: 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் ஆகியவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்குரிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் இவை ‘சீல்’ வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

அதன்படி, செஞ்சி தொகுதியில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் செஞ்சியில் காரிமங்கலம் சாலையில் உள்ள டேனி கல்வியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும், மயிலம் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் திண்டிவனம் மேல்பாக்கம் அரசு பொறியியல் கல்லூரியில் மேற்கு பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், திண்டிவனம் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் கிழக்கு பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், வானூா் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் வானூா் அருகே ஆசாசம்பட்டில் ஸ்ரீ அரவிந்தா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், விழுப்புரம் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், விக்கிரவாண்டி தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் விழுப்புரம் அய்யன்கோவில்பட்டு ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், திருக்கோவிலூா் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் திருக்கோவிலூா் கண்டாச்சிபுரம் எஸ்.கொல்லூா் வள்ளியம்மை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்கெனவே வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, தோ்தல் பாா்வையாளா்கள், அந்தந்தத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இவற்றை கண்காணிக்க முடியும் என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT