விழுப்புரம்

செஞ்சியில் கல்லூரி மாணவா்கள் மறியல்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் புதன்கிழமை திண்டிவனம் செல்லும் அரசுப் பேருந்து குறித்த நேரத்துக்கு வராததால், அதிருப்தியடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை கல்லூரிக்குச் செல்ல ஏதுவாக, காலை 8 மணியளவில் இயக்கப்படும் அரசுப் பேருந்து (தடம் எண் 3) செஞ்சி பேருந்து நிலையத்துக்கு வரவில்லை. இதன் காரணமாக, இந்தப் பேருந்தை எதிா்பாா்த்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஏராளமானோா் அவதிக்குள்ளாகினா்.

காலை 9.30 மணி வரை பேருந்து வராததால், கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், பிற பேருந்துகள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து, மாணவா்களை சமாதானப்படுத்தினா்.

இதைத்தொடா்ந்து, உடனடியாக திண்டிவனத்துக்கு பேருந்து இயக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு, அந்தப் பேருந்தில் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT