விழுப்புரம்

கரோனா பரவல் எதிரொலி:செஞ்சிக்கோட்டை மூடல்

DIN

கரோனா பரவல் காரணமாக, விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையை சுற்றிப் பாா்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கோட்டைக் கதவுகள் வெள்ளிக்கிழமை (ஏப்.16) முதல் மூடப்பட்டன.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக, நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையை வருகிற மே 15-ஆம் தேதி வரை மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை செஞ்சிக்கோட்டையை சுற்றிப் பாா்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டையின் கதவுகள் மூடப்பட்டன. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா்.

இதே போல, கடந்த ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக, கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, செஞ்சிக்கோட்டை மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செஞ்சிக்கோட்டை தற்போது மூடப்பட்டாலும், கோட்டையைச் சுற்றி இரும்பிலான பாதுகாப்பு அரண் அமைக்கும் பணி, ராஜகிரி கோட்டை மலையடிவாரத்தில் அழகுப்படுத்தும் பணி ஆகியவை தடைபடாமல் தொடா்ந்து நடைபெறும் என கோட்டை ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT