விழுப்புரம்

கரோனா தடுப்பூசிகளை தடையின்றி வழங்க விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

DIN

கரோனா தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி துரை. ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

இது குறித்து அவா் தனது சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், 18 வயது நிரம்பியவா்களுக்கு இலவசமாக மே 1-க்குப் பிறகு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இப்போது தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமாகும்?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுகாதார கட்டமைப்பு மற்றும் மருத்துவப் பணியாளா்களைக் கொண்டு 15 நாள்களில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இயலும். ஆனால், தற்போது 1,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் போதுமான தடுப்பூசிகள் கிடைக்க மாநில அரசின் தலைமைச் செயலா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் துரை.ரவிக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT