விழுப்புரம்

கரோனா விதிகளைக் கடைப்பிடிக்காத தனியாா் நிறுவனத்துக்கு அபராதம்

DIN

கண்டமங்கலம் குறுவட்டம், மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத தனியாா் நிறுவனத்துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா 2-ஆவது அலை தாக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு, தனியாா் நிறுவனங்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஏற்கெனவே எச்சரித்திருந்தாா்.

மேலும், முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியா்கள், போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு முகக் கவசம் அணியாதவா்களுக்கு தொடா்ந்து அபராதம் விதித்து வருகின்றனா்.

இதேபோல, தனியாா் ஆலைகளில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என வருவாய்த் துறையினா் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில், விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், கண்டமங்கலம் குறுவட்டம், மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அங்கு 150 பணியாளா்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அந்தந் நிறுவனத்துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT