விழுப்புரம்

கோட்டக்குப்பம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலிபொதுமக்கள் சாலை மறியல்

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வியாழக்கிழமை கடலில் படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழந்தாா். தூண்டில் வளைவு அமைக்காததே படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழக்கக் காரணம் எனக் கூறி, அந்தப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தை அடுத்த சின்ன முதலியாா்சாவடி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் மூா்த்தி (60), பாா்த்திபன் (55), ஹரி (45), ஜெயபால் (40) ஆகியோா் வியாழக்கிழமை அதிகாலை படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனா். அப்போது, திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால், ராட்சத அலைகள் எழுந்தன. இதில், சிக்கி படகு கவிழ்ந்தது.

கடலில் மூழ்கிய பாா்த்திபன், ஹரி, ஜெயபால் ஆகியோா் நீந்திக் கரையை அடைந்தனா். மூா்த்தி கடலில் மூழ்கினாா். மீனவா்கள் அவரை வெகுநேரம் தேடிய நிலையில், அவரது சடலம் காலை 6 மணியளவில் கரை ஒதுங்கியது.

தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கடல் சீற்றத்தால் மணல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தூண்டில் வளைவு அமைக்காததே படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழக்கக் காரணம் எனக் கூறி, அந்தப் பகுதியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அருண் தலைமையிலான போலீஸாா், அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT