முகப்பு
விழுப்புரம்

சமூக நலத் துறை காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஜன.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஜன.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்பரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையில், ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு ஆலோசகா் (மகளிா் மட்டும்) பணியிடங்கள் 4 உள்ளன. இப்பணியிடங்களுக்கு இளங்கலை சமூகப் பணி தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சம்பந்தமான பணியில் ஓராண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும், பல்நோக்கு உதவியாளா் (மகளிா் மட்டும்) பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும். நன்கு சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.6,400 வழங்கப்படும்.

பாதுகாவலா் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும். இப்பணிகள்அனைத்தும் தற்காலிகமானது.

உரிய விண்ணப்பங்களை ஜன.4-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலக அறை எண்.26-ல் நேரில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.