விழுப்புரம்

கோயில்களுக்குஇலவச மின்சாரம்வழங்கக் கோரிக்கை

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பின் தலைவா் தோ்வராஜ் தலைமையில் திரளான பூசாரிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு கால பூஜை திட்டத்தின் பயன்பெறும் பூசாரிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டதைப்போல, இந்த ஒரு கால பூஜை திட்டத்தில் இல்லாத பூசாரிகளுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்.

திருக்கோயில்களில் பணியாற்ற ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும். வருவாய் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கிராமக் கோயில்களுக்கு பூஜைப் பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT