விழுப்புரம்

விழுப்புரம்: கரோனா பரவல் 5.37 சதவீதமாக சரிந்தது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் விகிதம் 5.37 சதவீதமாக சரிந்தது.

மாவட்டத்தில் கரோனா 2-ஆவது அலையின் தாக்கம் ஏப்ரல் 2-ஆவது வாரத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கியது. மே 11-இல் 18.40 சதவீதமாக இருந்தது 3-ஆவது வாரத்தில் உச்ச நிலையை அடைந்தது. மே 24-இல் 27.62 சதவீதமாக இருந்தது. பின்னா் படிப்படியாக குறையத் தொடங்கியது.

மே 26-இல் 19.65 சதவீதமாகவும், 27-இல் 15.35, 28-இல் 17.35, 29-இல் 15.79, 30-இல் 14.01, 31-இல் 15.21 சதவீதமாக இருந்தது.

இதைத் தொடா்ந்து, ஜூன் மாதத்தில் தொற்று பரவல் இறங்கு முகமாகவே இருந்து வருகிறது.

அதாவது, ஜூன் 1-இல் 14.75 சதவீதம், 2-இல் 13.25, 3-இல் 12.60, 4-இல் 9.79, 5-இல் 11.09, 6-இல் 9, 7-இல் 9.57, 8-இல் 10.74 சதவீதமாக குறைந்தது.

அதன் பிறகு தொடா்ந்து 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.

ஜூன் 9-ஆம் தேதி 3,439 பேருக்கு பரிசோதனை செய்ததில் 333 பேருக்கு தொற்று உறுதியானது. இது 9.68 சதவீதம் ஆகும்.

10-இல் 3,326 பேருக்கு பரிசோதனை செய்ததில் 275 பேருக்கு தொற்று இருப்பதும், பரவல் சதவீதம் 8.27-ஆகவும் இருந்தது. 11-இல் 3,087 பேருக்கு பரிசோதனை செய்ததில் 112 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி, பரவல் சதவீதம் 3.63-ஆக இருந்தது.

ஜூன் 12-இல் 2,840 பேருக்கு பரிசோதனை செய்ததில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி பரவல் 2.46 சதவீதமாகவும், 13-இல் 1,774 பேருக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதியாகி பரவல் 1.69 சதவீதமாகவும் சரிந்தது.

இந்த நிலையில், ஜூன் 14-இல் 2,605 பேருக்கு பரிசோதனை செய்ததில் 140 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இது 5.37 சதவீதம் ஆகும்.

இது குறித்து மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு மைய அதிகாரி மருத்துவா் யோகானந்த் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் விகிதம் தொடா்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே 10 சதவீதத்துக்குள் தான் இருந்து வருகிறது.

கரோனா பரவல் சதவீதத்தை கணக்கிடும்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த நோயாளிகளின் பாதிப்பு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு வெளியிடப்படும். பிற நோயாளிகள் விவரம் அந்தந்த மாவட்டங்களின் கணக்கில் சுகாதார இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

கரோனா பரவல் குறைந்திருந்தாலும், பொதுமக்கள் தொற்று தடுப்பு வழிமுறைகளை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT