விழுப்புரம்

பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தீ விபத்து

DIN

விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் கட்டடங்கள், செல்லிடப்பேசி கோபுரம் மட்டுமல்லாது ஏராளமான மரங்களும் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் அந்த அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடங்களுக்கு பின்புறம் இருந்த டயா், குப்பைகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், அந்த பகுதியில் இருந்த தைல மரங்களும் தீயில் எரியத் தொடங்கின. பல அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீ, அலுவலகக் கட்டடம், செல்லிடப்பேசி கோபுரத்துக்கு செல்லும் கம்பிகளிலும் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். தீ விபத்துக்கு அங்கிருந்த பழைய பொருள்களை எரித்தது காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விழுப்புரம் மேற்கு போலீஸாா் நேரில் வந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT