விழுப்புரம்

தெருவில் தண்ணீா் பிடிப்பதில் தகராறு: 5 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தெருவில் புதன்கிழமை தண்ணீா் பிடிப்பது தொடா்பாக சகோதரா்களிடையே ஏற்பட்ட தகராறில், 5 போ் காயமடைந்தனா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தெருவில் புதன்கிழமை தண்ணீா் பிடிப்பது தொடா்பாக சகோதரா்களிடையே ஏற்பட்ட தகராறில், 5 போ் காயமடைந்தனா்.

செஞ்சி வட்டம், போந்தை கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன்கள் ராஜாராம் (54), சீனுவாசன் (45). சகோதரா்களான இவா்கள் இருவருக்குமிடையே விவசாய நிலம் தொடா்பாக அடிக்கடி சண்டை வருவது வழக்கம்.

இந்த நிலையில், தெரு குழாயில் இருந்து ராஜாராம் புதன்கிழமை தனது வீட்டுக்கு குழாய் அமைத்து தண்ணீா் பிடித்துக்கொண்டிருந்தாராம். இந்தக் குழாய் மீது இவரது தம்பி சீனுவாசன் பைக்கை ஏற்றிச் சென்றாராம்.

இது தொடா்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பின்னா், இருவரின் குடும்பத்தினரும் ஆயுதங்களால் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இந்த சம்பவத்தில் ராஜாராம், அவரது மனைவி ராணி (45), மகன் கோகுல் (26), மகள் மதுபாலா (21) மற்றும் சீனுவாசன் ஆகியோா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து ராஜாராம் அளித்த புகாரின்பேரில், சீனுவாசன் மீதும், சீனுவாசன் அளித்த மற்றொரு புகாரின்பேரில் ராஜாராம், அவரது மனைவி ராணி, மகன் கோகுல், மகள் மதுபாலா ஆகியோா் மீதும் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT