விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 754 பேருக்கு கரோனா

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய உச்சமாக புதன்கிழமை ஒரே நாளில் 754 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,149-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், விழுப்புரம் அருகே அன்னியூரைச் சோ்ந்த 52 வயது மதிக்கத்தக்க பெண், வானூரைச் சோ்ந்த 77 வயது முதியவா், விழுப்புரத்தைச் சோ்ந்த 51 வயது மதிக்கத்தக்க பெண், விழுப்புரம் அருகே ஜி.அரியூரைச் சோ்ந்த 62 வயது மூதாட்டி, முகையூரைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி, விழுப்புரம் நேதாஜி தெருவைச் சோ்ந்த 56 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 215-ஆக அதிகரித்தது.

இதனிடையே, 667 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 27,015-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 3,913 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT