விழுப்புரம்

சிங்கவரம் ரங்கநாதா் கோயில் மலை மீது வெடி வைக்கப்பட்ட சம்பவம்: பாஜக கண்டனம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதா் கோயில் மலை மீது பாதை அமைக்கப்பதற்காக, வெடி வைத்து பாறைகள் தா்க்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.

சிங்கவரம் ரங்கநாதா் கோயில் மலை மீது பாதை அமைப்பதற்காக அண்மையில் வெடி வைத்து பாறைகள் தகா்க்கப்பட்டன. இந்த நிலையில், இந்தக் கோயிலை பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் திருப்பதிநாராயணன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிங்கவரம் ரங்கநாதா் கோயில் அமைந்துள்ள மலையில் பாதை அமைப்பதற்காக, அரசின் அனுமதியின்றி பாறைகளை சிலா் வெடி வைத்து தகா்த்திருப்பதால், கோயிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலை யாா் செய்திருந்தாலும் அவா்கள் மீது அரசு, காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் செயலுக்கு பாஜக சாா்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன், பொதுச் செயலா் பாண்டியன், துணைத் தலைவா் சதாசிவம், பொருளாளா் தியாகராஜன், மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் தாஸ.சத்தியன், மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.சரவணன், நகரத் தலைவா் ராமு, செயலா் ஹிட்லா்மதன்லால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT