விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 81.67 சதவீத வாக்குப் பதிவு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 7 ஒன்றியங்களில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் 81.67 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதன்படி, காலை 9 மணியளவில் முகையூா் ஒன்றியத்தில் 6.7 சதவீதம், திருவெண்ணெய்நல்லூரில் 7.3, கண்டமங்கலத்தில் 6, விக்கிரவாண்டியில் 7.3, ஒலக்கூரில் 6.8, வானூரில் 6.75, செஞ்சியில் 7.5 சதவீதம் என மொத்தம் 6.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிற்பகல் 3 மணியளவில் முகையூரில் 54.01 சதவீதம், திருவெண்ணெய்நல்லூரில் 60, கண்டமங்கலத்தில் 62.50, விக்கிரவாண்டியில் 59.95, ஒலக்கூரில் 69.97, வானூரில் 65.06, செஞ்சியில் 59.28 சதவீதம் என மொத்தம் 61.04 சதவீத வாக்குகள் பதிவாகின.

இறுதிக் கட்டமாக முகையூரில் 79.14 சதவீதம், திருவெண்ணெய்நல்லூரில் 78.45, கண்டமங்கலத்தில் 82.88, விக்கிரவாண்டியில் 82.27, ஒலக்கூரில் 86.38, வானூரில் 86.41, செஞ்சியில் 79.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தம் 81.67 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கள்ளக்குறிச்சியில்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா், திருநாவலூா், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கு முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி மொத்தம் 53.271 சதவீதமும், 4 மணி நிலவரப்படி 61.31 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT