விழுப்புரம்

சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்: ஆட்சியா் தலைமையில் இடம் தோ்வு

DIN

இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்டு இறந்த சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த 2-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, விழுப்புரத்தை அடுத்துள்ள கோலியனூா் அருகே மணிமண்டபம் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் மோகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி, வட்டாட்சியா் வெங்கட்டசுப்பிரமணியன், வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT