விழுப்புரம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணை செப்.27-க்கு ஒத்திவைப்பு

DIN

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் ஆஜராகினா்.

இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்ற வரம்புக்குள் வராது. எனவே, இங்கு இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT