விழுப்புரம்

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ்3 இளைஞா்கள் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கண்டமங்கலம் அருகே பள்ளிபுதுபட்டு பகுதியில் கடந்த ஆக. 31-ஆம் தேதி நாட்டு வெடி குண்டு வீசி தாக்குல் நடத்திய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சோ்ந்த கருப்பண்ணசாமி மகன் பென்னரசு(24), குமாா் மகன் வினோத்(22), விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த பாஷா மகன் அகமது உசேன்(21) ஆகியோரை கண்டமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பரிந்துரையை ஏற்று மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்து வந்த பென்னரசு உள்ளிட்ட மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT