விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

DIN

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் முகையூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 1,305 பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவா்கள் விழுப்புரம் மாவட்டம், ஏமப்பூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரா. கருணாகரன் (20), ரா.பாத்திபன் (19) என்பது தெரிய வந்தது. இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செங்கல்பட்டு சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

SCROLL FOR NEXT