விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் விதிமீறல்: ரூ.1.53 லட்சம் அபராதம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் உள்பட 610 பேரிடம் ரூ.1.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது, முகக் கவசம் அணியாத 457 பேரிடமும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்காத 26 பேரிடமும், சாலைகளில் சுற்றித் திரிந்த 127 வாகன ஓட்டிகளிடமும் என விதிமீறலில் ஈடுபட்ட மொத்தம் 610 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.1,53,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT