விழுப்புரம்

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் நகை, பணம் திருட்டு

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றனா்.

DIN

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றனா்.

விழுப்புரம் வழுதரெடி, சபரி நகரைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (59). அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா். இவா், தனது குடும்பத்துடன் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வாக்கூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று தங்கினாா்.

செவ்வாய்க்கிழமை இரவு ஜெயச்சந்திரன் வீடு திரும்பியபோது, வீட்டின் முன் பக்கக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டினுள்ளே அலமாரியில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT