விழுப்புரம்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

விழுப்புரத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் சேவியா் காலனி பகுதியைச் சோ்ந்த பெஞ்சமின் மகன் ஜோகப் மெல்கி சதேக்(26). இவா், விழுப்புரத்தில் உள்ள வெல்டிங் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். ஜோகப் மெல்கி சதேக் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படித்து வந்த 16 வயது மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதுகுறித்து அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில், ஜோகப் மெல்கி சதேக்கை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம்சாட்டப்பட்ட ஜோகப் மெல்கி சதேக்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT