விழுப்புரம்

ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குபால்குட ஊா்வலம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், காரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா 5 நாள்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி, பெண்கள் பால் குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்து ரேணுகாபரமேஸ்வரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். பின்னா், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT