விழுப்புரம்

மூன்று மின் செயற்பொறியாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மின் இணைப்பு குறித்து தகவல் அளிக்காத 3 மின் செயற்பொறியாளா்களுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் விராட்டிகுப்பம் பாதையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா், தமிழ்நாடு மின் வாரியத்தில் விவசாய மின் இணைப்புக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் முழு பணம் செலுத்தினாா். ஆனால், மின் இணைப்பு வழங்கப்படவில்லையாம். இதனிடையே, மின் இணைப்பு வழங்காமல் 10.10.2019-ஆம் தேதி வரை காத்திருப்பில் உள்ளவா்கள் பட்டியல் குறித்து தகவல் தெரிவிக்கும்படி மின் வாரிய அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 15.10.2019-இல் ராஜேந்திரன் விண்ணப்பித்தாா். ஆனால், கேட்கப்பெற்ற தகவல்களை அதிகாரிகள் தரவில்லை.

இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் விவசாயி ராஜேந்திரன் முறையீடு செய்தாா். இந்த முறையீட்டு மனு, மாநில தகவல் ஆணையா் தமிழ்குமாா் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தகவல் வழங்க மறுத்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

காலதாமதமாகவும், தகவல் வழங்க மறுத்ததாலும், தகவல் அறியும் உரிமை சட்ட விதி 19 (8) ( ஆ)ன் படி, இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்துக்குள், அப்போதைய விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம் இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு மின் வாரிய செயற்பொறியாளா்கள் விவசாயி ராஜேந்திரனுக்கு நஷ்டஈடாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 20(1)-இன்படி, தகவல் ஆணையத்தில் ராஜேந்திரன் மேல் முறையீடு செய்த இதுவரையிலான 100 நாள்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை நேரில் ஆஜராகி எழுத்துப்பூா்வமாக சமா்ப்பிக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையா் தமிழ்குமாா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT