விழுப்புரம்

விபத்தில்லா தீபாவளி:தீயணைப்புத் துறை விழிப்புணா்வு

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, விழுப்புரத்தில் பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

DIN

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, விழுப்புரத்தில் பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதன்படி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடைத் தெரு பகுதிகளில் தீயணைப்புத் துறை வீரா்கள் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் நா.வேல்முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு நிலை தீயணைப்பு அலுவலா்கள், முன்னணி தீயணைப்பு வீரா்கள் கலந்துகொண்டனா்.

இதன் தொடா்ச்ச்சியாக, விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு விபத்தில்லாமல் தீபாவளியைக் கொண்டாடுதல், பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்தல், விபத்து நேரிட்டால் உடனடியாக செய்ய வேண்டியவைகள் குறித்து தீயணைப்புத் துறை வீரா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். நிகழ்ச்சிக்கு தீயணைப்பு, மீட்புப் புணிகள் துறை மாவட்ட அலுவலா் ராஜேஷ்கண்ணா தலைமை வகித்தாா். இதில், ஏழுமலை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மாசற்ற தீபாவளி - ஆட்சியா் அறிவுறுத்தல்: இதேபோல, விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT