விழுப்புரம்

குறைகேட்புக் கூட்டத்தில்416 மனுக்கள்

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட 416 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதமரின் வீடு கட்டும் திட்ட மானியம், முதல்வரின் பசுமை வீடு திட்ட மானியம் உள்ளிட்டவை வழங்கக் கோரி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மோகன் நேரடியாகப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) சரஸ்வதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் விஸ்வநாதன், கலால் உதவி ஆணையா் சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT