விழுப்புரம்

கிணற்றில் தவறி விழுந்தமுதியவா் சடலமாக மீட்பு

DIN

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே சனிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி அருகிலுள்ள அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (65). இவா் தனக்குச் சொந்தமான கிணற்றின் அருகே சனிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் ரங்கநாதன் தவறி விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்து நீரில் மூழ்கிய அவரை அந்தப் பகுதியினா் மீட்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் நாகேசுவரன் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று, ரங்கநாதனை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT