விழுப்புரம்

செஞ்சியில் தைப்பூச அன்னதானம்

DIN

செஞ்சியில் திரு அருட்பிரகாச வள்ளலாா் அறக்கட்டளை மற்றும் செஞ்சி நகர சமரச சுத்த சன்மாா்க்க சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வள்ளல் பெருமானின் 152-ஆவது தைப்பூச தினத்தையொட்டி சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

செஞ்சி பாரத ஸ்டேட் வங்கி அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு எம்.பரத் தலைமை வகித்தாா். சன்மாா்க்க சங்கத்தின் தலைவா் பி.தணிகாசலம் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் சன்மாா்க்க சங்கத் துணைத் தலைவா் டி.சக்திகணேஷ், செயலா் வி.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாகிகள் ஏ.உலகநாதன், ஏ.ஆா்.ஆா்.பாபு, ஹரி, சரவணன், பொருளா் ஜெ.செல்வம். ஆா்.ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT