விழுப்புரம்

அரிய வகை பறவைகள் வேட்டை: மூவா் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரிய வகை பறவைகளை வேட்டையாடியதாக மூவரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வனச்சரகத்துக்குள்பட்ட உப்புவேலூா், சிவன் கோவில் அருகே வயல்வெளியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, திண்டிவனம் வனத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை அந்தக் கிராமத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பறவைகளை வேட்டையாடிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், புதுவை மாநிலம், வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த சங்கா் மகன் கௌதம் (22), செஞ்சியான் மகன் சூா்யா (24), ரமேஷ் மகன் சரவணன் (31) என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, திண்டிவனம் வனத் துறையினா் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த வேட்டையாடப்பட்ட அரிய வகை பறவைகள் 20, உள்நாட்டு பறவைகள் 10 என 30 பறவைகள், 2 நாட்டு துப்பாக்கிகளையும் வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT