விழுப்புரம்

புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை:அமைச்சா் தொடங்கி வைத்தாா்

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சையை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

DIN

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சையை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் செயல்படும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடியில் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வேண்டுமெனில், சென்னை, புதுச்சேரி பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. இனி, இங்கேயே சிகிச்சை பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி, வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஜனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT