கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கும் ஆட்சியா் ஷ்ரவன்குமாா். 
விழுப்புரம்

விழுப்புரத்தில் விழிப்புணா்வுப் பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கும் ஆட்சியா் ஷ்ரவன்குமாா்.

DIN

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நீலவானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ஷ்ரவன்குமாா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நிறைவடைந்தது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை, நாட்டுநலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனா்.

முன்னதாக, நெகிழியில்லா தமிழகம் என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை, ஓவியம், வாசகம் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் ஷ்ரவன்குமாா் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா்கள் ராம்குமாா், இளையராஜா, பள்ளித் தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT