விழுப்புரத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ் மகள் மதுமிதா (18). இவா், வியாழக்கிழமை இரவு விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் கைப்பேசியில் பேசியபடி நடந்து சென்றாராம். அப்போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள் மதுமிதாவின் கைப்பேசியை பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.